சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ‘லியோகே’ என்ற இடத்தில் வனவிலங்கு காப்பகம் உள்ளது. இங்கு பலவிதமான மிருகங்கள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு பார்வையாளர்கள் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.
இந்த நிலையில் இந்த காப்பகத்திற்கு வருகை புரிந்த லியூ என்ற பெண் ஆப்பிரிக்க சிங்கம் என்று பெயர் எழுதப்பட்டிருந்த கூண்டில் அடர்ந்த முடியுடன் இருக்கும் திபெடியன் மாஸ்டிப் என்னும் ஒரு ரக நாய் வைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.
இது குறித்து புகார் அளித்த அவர், இதேபோல், மேலும் 3 விலங்குகளுக்கு வேறு பெயர் கூறி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
இதனால் காப்பகத்திற்கு வந்த பார்வையாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.பொதுமக்களை இந்த நிர்வாகத்தினர் ஏமாற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.
இதற்கிடையே, ஏற்கனவே இங்கு இருந்த ஆப்பிரிக்க சிங்கம் இனபெருக்கத்துக்கு வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மிருக காட்சி சாலை தலைமை நிர்வாகி கூறினார்.
அதேபோல் பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளின் கூண்டுகள் மாற்றியமைக்கபட்டுள்ளதாகவும், இது பார்வையாளர்களை ஏமாற்றும் நோக்கத்தில் செய்யப்பட்டதல்ல எனவும் தெரிவிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.
இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக