Ad

Photobucket
 
வெள்ளி, 6 செப்டம்பர், 2013

நிவாரணம் பெற பிணமாக நடித்தவர் தாகம் எடுத்ததால் சிக்கினார்


சீனாவில் அரசின் நிவாரண உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர், வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார். 

சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தில் பலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர். 

அப்படி பலியானவர்களது குடும்பத்திற்கு நிவாரணமாக இழப்பீடு வழங்கி வருகிறது சீன அரசு. அவ்வாறு வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெறுவதற்காக, ஹூபே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அனல் காற்றில் சிக்கி பலியானவர் போல் நடித்தார். 

அதிகாரிகள் வந்து அவரது உடலைப் பரிசோதித்தனர். திடீரென வெப்பத்தின் தாக்கம் அதிகமாகியதால், பிணமாகப் படுத்திருந்த நபருக்கு தாகம் அதிகரித்தது. 

தண்ணீர் குடிக்காவிட்டால் உயிரே போய் விடும் நிலையில் இருந்த அவர், உயிரைக் காத்துக் கொள்ள உடனடியாக அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்தினார். 

இறந்து கிடந்த பிணமொன்று திடீரென எழுந்து தண்ணீர் அருந்துவதைக் கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது சாயம் வெளுத்துப் போனதால் தப்பி ஓட முயன்ற அந்நபரை பொலிசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். 

மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்  
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.