Ad

Photobucket
 
சனி, 21 ஜூலை, 2012

கூகுலில் வினைத்திறன் மிக்க தேடலை மேற்கொள்ள Shoutcodes

நாம் இணையத்தில் எதையாவது தேடவேண்டுமென்றால் கீபோர்ட்டில் கைகள் தட்டுவது google என்ற வார்த்தையை தான்.

அந்த வகையில் எமது தேவைக்கு ஏற்ற தகவல்களை மாத்திரம் தேடிப்பெற கீழ் உள்ள Shortcode களோடு இணைந்து தேடலை மேற்கொள்ள வேண்டும்

link:URL(இணைய முகவரி): அந்த முகவரிக்கு லிங்க் செய்யப்படும் மற்ற இணையப் பக்கங்களைப் பட்டியலிடும்.

related:URL: முகவரியில் உள்ள இணையத்தளத்துடன் சம்பந்தப்பட்ட மற்ற தளப் பக்கங்களைப் பட்டியலிடும்.

site:domain.com(தேடப்படும் சொல்): தேடலை அந்த கொடுக்கப்பட்ட தளத்துடன் நிறுத்திக் கொள்ளும்.

allinurl:WORDS: இணைய முகவரியில் உள்ள அனைத்து தேடப்படும் சொற்கள் உள்ள தளங்கள் மட்டும் பட்டியலிடப்படும்.

inurl:WORD = like allinurl: மேலே சொல்லப்பட்ட தேடல் போலச் செயல்படும், ஆனால் முதல் சொல்லுக்கான தேடல் முடிவுகளை மட்டும் கொடுக்கவும்.

allintitle:WORD: தலைப்பில் உள்ள சொற்களுக்கான முடிவுகளை மட்டும் காட்டும்.

intitle:WORD: மேலே சொல்லப்பட்ட தேடலைப் போல இருந்தாலும், அடுத்த சொல்லுக்கான தேடல் மட்டும் மேற்கொள்ளப்பட்டு முடிவுகள் காட்டப்படும்.


cache:URL: கூகுள் ஏற்கனவே, கொடுக்கப்பட்ட தள முகவரி சார்ந்து தன் கேஷ் மெமரியில் வைத்துள்ள பதிப்பினை மட்டும் காட்டும்.

info:URL: இணைய முகவரியைக் கொண்டுள்ள தேடல்கள் சார்ந்தவற்றை மட்டும் பக்கமாகக் காட்டும். கூகுள் தேடல் கட்டத்தில், ஓர் இணைய முகவரியினை டைப் செய்து தேடச் சொன்னால், என்ன தேடல் நடக்குமோ, அதே தேடல் இந்தக் கட்டளைக்கும் மேற்கொள்ளப்படும்.

filetype:SOMEFILETYPE: குறிப்பிட்ட கோப்பு வகைகளில் மட்டும் தேடப்படும்.

&filetype: SOMEFILETYPE: குறிப்பிடப்படும் கோப்பு வகையினை மட்டும் விடுத்து, மற்றவற்றில் தேடல் மேற்கொள்ளப்படும்.

site:www.somesite.net“+www.somesite.net”: இந்தக் கட்டளையில், கூகுள் உங்கள் தளத்தின் எத்தனை பக்கங்களை இன்டெக்ஸ் செய்துள்ளது என்று காட்டப்படும்.

allintext: இணையப் பக்கங்களின் உள்ளாக மட்டுமே தேடல் நடத்தப்படும். அவற்றின் தொடர்பான தளங்களில் தேடல் மேற்கொள்ளப்பட மாட்டாது.

allinlinks: லிங்க் தொடர்புக்குள்ளாக மட்டுமே தேடல் மேற்கொள்ளப்படும்.

Word A OR Word B: முதல் சொல் அல்லது இரண்டாவது சொல் என ஒன்றுக்கு மட்டும் தேடல் மேற்கொள்ளப்படும்.

“Word” OR “Phrase”: தரப்பட்டுள்ள சொல் அல்லது சொல் தொகுதி போலச் சரியாகத் தென்படுபவற்றை மட்டுமே தேடித்தரும்.


Word A Word B: முதல் சொல்லை(word A) கண்டறியும், ஆனால் இரண்டாவது சொல்லையும் இணைத்து முடிவுகளை வடிகட்டித் தரும்.


Word A +Word B: முதல் மற்றும் இரண்டாவது சொற்கள் இணைந்து கிடைக்கும் இடங்களை மட்டும் தேடல் முடிவுகளாகக் காட்டும்.

~WORD: குறிப்பிட்ட சொல் மற்றும் அதனைப் போன்று பொருள் கொண்ட மற்ற சொற்களுக்காகவும்(synonyms) தேடும்.


~WORD WORD: சொல்லுக்கான அதே பொருள் தரும் சொற்களை மட்டும் தேடிக்காட்டும்.
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.