யூடியூப் உட்பட சுமார் 20,000 இணையத்தளங்களைப் பாகிஸ்தான் அரசு தடைசெய்துள்ளதாகத் தெரியவருகின்றது.
'இனசன்ஸ் ஒப் முஸ்லிம்ஸ்' திரைப்படக்காட்சிகளை அகற்றுமாறு கூகுளிடம் பாக். அரசாங்கம் பலதடவை வேண்டுகோள் விடுத்திருந்தது.
எனினும் கூகுள் அவற்றைத் தொடர்ச்சியாக நிராகரித்திருந்தது.
இதனையடுத்து அதிரடியான முடிவுகளை மேற்கொள்ளத் திட்டமிட்ட பாகிஸ்தான் யூடியூப் உட்பட சுமார் 20,000 இணையத்தளங்களைத் தடைசெய்துள்ளது.
இஸ்லாம் மதத்தினை அவமதிக்கும் மற்றும் சர்ச்சைக்குரிய விடயங்களைக் கொண்டிருந்த தளங்களே இவ்வாறு தடைசெய்யப்பட்டுள்ளதாகத் தெரிகின்றது.
பல இணையத்தளங்களின் தடைகள் கூடியவிரைவில் தளர்த்தப்படலாம் . ஆனால்
யூடியூப் மீதான தடை நீண்டநாட்களுக்கு நீடிக்கும் என
எதிர்பார்க்கப்படுகின்றது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக