உங்களால் தொடர்ச்சியாக மூன்று நாட்களுக்கு குளிக்காமல், மலசலம்
கழிக்காமல் இருக்க முடியுமா? முடியாது என்பதுதான் உங்கள் பதிலாக இருக்கும்.
ஆனால் இந்தோனேஷியாவை பூர்வீகமாக கொண்ட Tiram Tidong ஆதிவாசிகள் குழுவிடம்
மிகவும் விசித்திரமான நடைமுறை ஒன்று காலம் காலமாக இருந்து வருகின்றது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
திருமணத்தை தொடர்ந்து மணமக்கள் இரவு, பகல் உட்பட மூன்று நாட்களுக்கு
குளியலறை மற்றும் மலசலகூடம் ஆகியவற்றை பயன்படுத்துகின்றமையில் இருந்து
கட்டாயமாக தடுக்கப்பட்டு உள்ளார்கள். குளிக்கின்றமையோ, மலசலம்
கழிக்கின்றமையோ இம்மூன்று நாட்களுக்கு ஆகாது.
குறிப்பாக புதுமண தம்பதிக்கு இம்மூன்று நாட்களும் மிக சொற்ப அளவிலேயே
உணவு, நீராகாரம் ஆகியன வழங்கப்படுகின்றன. இதன் மூலம் மலசலம் ஆகியவற்றை
கழிக்க வேண்டிய தேவைப்பாட்டை கட்டிப்பாட்டில் வைத்திருக்க முடிகின்றது.
குளியலறை, மலசலகூடம் ஆகியவற்றுக்கு செல்கின்றார்களா? என்பதை கண்ணும் கருத்துமாக உறவினர்கள் கண்காணித்துக் கொண்டு இருப்பார்கள்.
இது ஒரு வகையான சித்திரவதை என்று இச்சமூகத்தை சாராதவர்களால் பெரிதும் விமர்சிக்கப்பட்டு வருகின்றது.
ஆனால் இம்மரபை பேண தவறுகின்ற தம்பதிகளின் திருமண வாழ்க்கை குழப்பம்,
முறிவு, அகால மரணம் போன்றவற்றில் முடிகின்றது என இச்சமூகத்தை சேர்ந்தவர்கள்
சந்தேகத்துக்கு இடம் இன்றி விசுவாசிக்கின்றார்கள்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக