Ad

Photobucket
 
திங்கள், 8 அக்டோபர், 2012

இன்றைய நாள் எப்படி.. வாருங்கள் உங்கள் இராசிக்கான பலன்கள் பார்க்கலாம்!

மேஷம்:
காலையில் வீட்டுக்குத் தேவையான பொருள் ஒன்றை வாங்க கணிசமான தொகையை செலவிடலாம். மாலையில் பணவரவுகளைப் பெறலாம். நண்பர்கள் சிலர் தங்களின் வேலைகளுக்காக உங்களையும் வெளியில் அழைத்துச் செல்லலாம். அரசு தொடர்பான காரியங்கள் அனுகூலமாக முடியும். கனவுத் தொல்லையுண்டு.


ரிஷபம்:
கொடுத்த வாக்கை எப்படியாவது காப்பற்ற வேண்டும் என்ற துடிப்போடு செயல்படுவீர்கள். தேக ஆரோக்கிய விஷயங்களில் அக்கறை காட்டுவீர்கள். பெண்கள் வழியில் சுபச் செலவுகளைச் சந்திக்கலாம். மாலை நேரத்தில் குடும்பத்தினருடன் வெளியிடங்களுக்கு செல்லும் வாய்ப்பு உருவாகலாம். மாற்று மதத்தினர் உதவி கிட்டும்.


மிதுனம்:
சோர்வு, சோம்பல் ஆட்கொள்ளும் நாள். பல நாட்களாக தொலைபேசியில் மட்டும் பேசிக் கொண்டிருந்த ஒருவரை நேரில் சந்திக்கலாம். கொடுக்கல் வாங்கல்களில் எச்சரிக்கை அவசியம். குடும்ப பெரியவர்களின் கோபத்திற்கு ஆளாகாமல் இருக்க பொறுமை நிதானம் அவசியம். வேலை நெருக்கடிகள் கூடும்.


கடகம்:
நண்பர்கள் வட்டம் விரிவடையும். உறவினர்கள் வருகையால் உங்களின் சில வேலைகளில் மாற்றம் செய்யலாம். ஆடை, அலங்காரப் பொருட்கள் வாங்கலாம். அதிக செலவாகும் என நினைத்த காரியம் ஒன்று குறைந்த செலவில் முடியலாம். மாலை நேரத்தில், எதிர்பாராத செலவுகளைச் சந்திக்கலாம்.


சிம்மம்:
அண்டை, அயலார் மத்தியில், உங்களின் செல்வாக்கை காட்ட முற்படுவீர்கள். நினைத்ததற்கு மாறாக சில விஷயங்கள் நடந்தாலும், அது நல்லதாகவே நடக்கும். புதிய முயற்சிகளில் வெற்றி கிடைக்கும். நீண்ட நாட்களாக சந்திக்காத நண்பர் அல்லது உறவினர் ஒருவரை மாலை நேரத்தில் சந்திக்கலாம். பணவரவு உண்டு.


கன்னி:
புதியவர்களின் நட்பு கிடைக்கும். உங்களுக்கு பிடித்தமான ஒன்றை மற்றவர்களுக்காக விட்டுக் கொடுப்பீர்கள். பிரபலமான ஆலயங்களுக்கு சென்று வழிபாடு செய்யலாம். உங்கள் நலனில் அக்கறை கொண்ட ஒருவரை அறிந்து கொள்வீர்கள். சக ஊழியர்கள் சிலர் உங்களிடம் கடனுதவி கேட்கலாம். மருத்துவச் செலவு உண்டு.


துலாம்:
தொழில் ரீதியாக சில வேலைகளை தவறாகச் செய்து விட்டு மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். உங்களுக்கு வேண்டிய ஒருவர் மீதுள்ள கோபத்தை, சிலர் உங்களின் மீது காட்டலாம். மனைவி வழியில் சிறு மனக்கசப்புகள் ஏற்படலாம். வெளியூரில் இருக்கும் ஒருவரை தொடர்பு கொண்டு பேச முற்பட்டு அது முடியாமல் போகலாம்.


விருச்சிகம்:
சந்தோஷமான அனுபவங்களையும், சங்கடமான அனுபவங்களையும் கலந்து எதிர்கொள்ளும் நாள். காலையில் வந்த பணவரவு ஒன்றுக்கு மாலையில் செலவு ஏற்படலாம். வாகனங்களால் தொந்தரவு ஏற்பட்டு சிரமப்படலாம். சக ஊழியர்களின் ஏட்டிக்குப் போட்டியான செயல்பாடுகளால் எரிச்சல் அடையலாம்.


தனுசு:
அனுகூலமான செய்திகளைக் கேட்கலாம். தொழில் ரீதியாக புதிய ஒப்பந்தங்கள் போட மேற்கொண்ட முயற்சிகளில் முன்னேற்றம் உண்டு. மாமன், மைத்துனர்கள் நீங்கள் கேட்ட உதவிகளைச் செய்யலாம். பணத்தட்டுப்பாட்டை தவிர்க்க செலவுகளில் சிக்கனம் காட்ட வேண்டியது அவசியம். கலைஞர்கள் புதிய வாய்ப்புகளைப் பெறலாம்.


மகரம்:
குதர்க்கமாகப் பேசி மற்றவர்களின் அதிருப்திக்கு ஆளாகலாம். கூட்டுத் தொழில் விவகாரங்களில் எச்சரிக்கை அவசியம். உங்களின் செல்வாக்கை காட்டி சிலரிடம் காரியம் சாதிக்க முற்படுவீர்கள். கேளிக்கை, கொண்டாட்ட விஷயங்களில் நாட்டம் செல்லும். மாலை நேரத்தில் எதிர்பாராத சந்திப்புகள் நிகழும்.


கும்பம்:
சில விஷயங்களில் நினைத்தது ஒன்றாகவும், நடப்பது ஒன்றாகவும் அமையும். நண்பர் மூலம் உங்களுக்கு அறிமுகமான ஒருவரை மற்றொருவருக்கு அறிமுகப்படுத்தி வைப்பீர்கள். மாலை நேரத்தில் பிள்ளைகள் வழியில் செலவு உண்டு. வியாபாரிகளுக்கு கடன் பாக்கிகள் வசூலாகும். அலைச்சல், திரிச்சல் உண்டு.


மீனம்:
வீட்டில் வசதி வாய்ப்புகளை அதிகரிக்க முற்படுவீர்கள். இரண்டு மூன்று நாட்களாக எதிர்பார்த்த பணவரவு ஒன்று வரலாம். தொழில் ரீதியாக சிலரிடம் ஆலோசனை கேட்கலாம். தம்பதியர் இடையே அன்யோன்யம் அதிகரிக்கும். நீங்கள் நினைப்பதே சரியென நினைத்து செயல்படுவீர்கள். புதியஅனுபவங்களைப் பெறலாம்.

 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.