நடிகர் விக்ரம் நடித்து வெளியாகி மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தி இருந்த
அந்நியன் தமிழ் திரைப்படத்தை நம் வாசகர்கள் மறந்து இருக்க மாட்டீர்கள்.
மனிதர்கள் பூலோகத்தில் செய்கின்ற பாவங்களுக்கு நரகலோகத்தில் என்ன தண்டனைகள்
வழங்கப்படுகின்றன? என்பது குறித்து இப்படத்தில் காட்டப்பட்டு இருந்தது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
நரகம் பற்றிய நம்பிக்கைகள் உலகத்தின் அனைத்து சமூக மக்கள் மத்தியிலும் இருக்கத்தான் செய்கின்றன.
பாவங்களுக்காக நரகலோகத்தில் அனுபவிக்க நேர்கின்ற தண்டனைகள் குறித்து
மக்களுக்கு விளக்கம் கொடுப்பதற்கென தாய்லாந்து நாட்டில் ஒரு மாதிரி நரகம்
அமைக்கப்பட்டு இருக்கின்றது.
Wat Phai Rong Wua விகாரையோடு சேர்ந்த இம்மாதிரி நரகம் அமைக்கப்பட்டு
உள்ளது. பயமுறுத்தும் உருவங்கள் கொண்ட தீய சக்திகளால் மனிதர்கள் சித்திரவதை
செய்யப்படுகின்ற காட்சிகளை கொண்ட தோற்றப்பாடுகளை இம்மாதிரி நரகத்தில் காண
முடிகின்றது. இதனால் தாய்லாந்து மக்கள் இதை நரகம் என்றே அழைக்கின்றனர்.
புத்த சமயிகளை பொறுத்த வரை Wat Phai Rong Wua விகாரை ஒரு முக்கிய
வழிபாட்டுத் தலம். இதனால் உலகம் பூராவும் இருந்து யாத்திரிகர்கள்
இவ்வாலயத்துக்கு வந்த வண்ணம் உள்ளனர். அத்துடன் சுற்றுலாப் பயணிகளுக்கும்
இது ஒரு முக்கிய இடமாக இருந்து வருகின்றது.
இம்மாதிரி நரகத்தில் பாவங்கள், தண்டனைகள் ஆகியன குறித்த விளக்கங்கள் ஒலிபெருக்கிகள் மூலமாக அறிவிக்கப்பட்ட வண்ணம் உள்ளன.
இது பயமுறுத்துகின்ற இடம் அல்ல, பாவங்களை செய்ய வேண்டாம் என்று அறிவுறுத்துகின்ற இடம் என்கின்றனர் நடத்துனர்கள்.
ஆயினும் இளகிய மனம் கொண்டவர்களுக்கும், குழந்தைகள் மற்றும் பெண்கள் ஆகியோருக்கும் இது ஒரு பயங்கர நரகம்தான்.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
























கருத்துரையிடுக