பாம்பு கடித்த பெண், குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்ததால், விஷம் பரவி,
குழந்தை பரிதாபமாக உயிரிழந்தது. ஆபத்தான நிலையில், தாய் சிகிச்சை பெற்று
வருகிறார்.
விழுப்புரம் மாவட்டம், வீரணாமூர் காலனியைச் சேர்ந்தவர் மோகன், (36); இவரது மனைவி சாரதா, (32). இவர்களுக்கு மூன்று குழந்தைகள் உள்ளனர். இவர்களின் வீட்டை ஒட்டி, விவசாய நிலங்கள் உள்ளன.
நேற்று முன்தினம் இரவு 12 மணிக்கு, வீட்டில் தூங்கிக் கொண்டிருந்த சாரதா, தன்னை ஏதோ கடிப்பதை உணர்ந்து, திடுக்கிட்டு எழுந்துள்ளார். மின்சாரம் தடைபட்டிருந்த அந்த நேரத்தில், தன் ஒரு வயது குழந்தை சபரி அழுததால், வீட்டிற்கு வெளியே சென்ற சாரதா, குழந்தைக்கு தாய்ப்பால் கொடுத்துள்ளார்.
சிறிது நேரத்தில் மின்சாரம் வந்ததும், சாரதா மற்றும் உறவினர்கள் வீட்டுக்குள் சென்று பார்த்தபோது, நான்கு அடி நீள, நல்ல பாம்பு இருந்ததை கண்டு, அதை அடித்துக் கொன்றனர். பாம்பு கடித்ததால், சாரதாவிற்கு மயக்கம் ஏற்பட்டது. அவருக்கு, பச்சிலை வைத்தியம் பார்க்கப்பட்டது. பின், வீட்டிற்கு திரும்பிய அவர், தாய்ப்பால் குடித்துவிட்டு, தூங்கிக் கொண்டிருந்த குழந்தை சபரி, தூக்கத்திலேயே இறந்து கிடந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்து, மீண்டும் மயங்கி விழுந்தார்.
உயிருக்கு ஆபத்தான நிலையில், புதுச்சேரி ஜிப்மர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள அவருக்கு, தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.
இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்

கருத்துரையிடுக