Ad

Photobucket
 
செவ்வாய், 9 அக்டோபர், 2012

பல பெண்களை திருமணம் செய்து ஏமாற்றி வந்த கலியாண இராமன் கைது!

பெண்களை திருமணம் செய்து ஏமாற்றுகின்றமையை வாடிக்கையாக கொண்டு உள்ள தமிழர் ஒருவர் களனியில் வைத்து கடந்த நாட்களில் பொலிஸாரால் கைது செய்யப்பட்டு உள்ளார்.

இவரின் பெயர் தங்கராசா புஷ்பராசா. சொந்த இடம் வவுனியா.

 மணமகள் தேவை என்று பிரபல தமிழ் பத்திரிகை ஒன்றில் இவர் விளம்பரங்கள் பிரசுரிப்பார். தொடர்புகளுக்கு சொந்த கையடக்கத் தொலைபேசி இலக்கத்தை கொடுப்பார். இவருக்கு உறவினர்கள் எவரும் கிடையாது என்றும் விரும்புகின்ற பெண்கள் இவருடன் நேரடியாகவே பேசிக் கொள்ள முடியும் என்றும் விளம்பரங்களில் சொல்லப்பட்டு இருக்கும். அத்துடன் ஏராளமான சொத்துக்களுக்கு சொந்தக்காரர் என்றும் விளம்பரங்களில் குறிப்பிடப்பட்டு இருக்கும்.

இவர் மிகவும் கவர்ச்சியாக பேசக் கூடியவர். எவரையும் இலகுவில் ஈர்க்கக் கூடியவர். ஆகவே பெண்கள் பலரையும் மயக்குகின்றமை இவருக்கு மிகவும் இலகுவான காரியமாக இருந்து வந்திருக்கின்றது.

சொத்துப் பத்துக்கள் நிறைய பெண்களையே திருமணம் செய்து கொள்வார். திருமணத்தைத் தொடர்ந்து வதிவிடத்தை மாற்றுவார். வியாபாரத்துக்கு அதிக பணம் தேவைப்படுகின்றது என்று சொல்லி புது மனைவியிடம் பெரிய தொகைப் பணம்ம் கறந்து கொள்வார். சில மாதங்களின் பின் பணத்துடன் தலைமறைவாகி விடுவார்.

இவர் முதல் மனைவியை விவாகரத்துப் பண்ணி உள்ளார். பின் இரு பெண்களை சட்டப்படி திருமணம் செய்து இருக்கின்றார். வைத்தியச் செலவுக்கு 22 இலட்சம் ரூபாய் பணம் தேவை என்று திருமணம் ஆகி மூன்று மாதங்களுக்கு உள்ளாகவே பிந்திய இரு மனைவியரில் முந்தியவரிடம் கேட்டு இருக்கின்றார். பின் இம்மனைவியை விட்டு நழுவிக் கொண்டார். இதே போல வியாபார நடவடிக்கைகளுக்கு என்று சொல்லி மற்ற  மனைவியிடம் 20 இலட்சம் ரூபாய் கேட்டு இருக்கின்றார்.

இவர் குறித்து பொலிஸாருக்கு முறைப்பாடுகள் கிடைத்தன. புலனாய்வு விசாரணைகளை முடுக்கி விட்டார்கள். தொடர்ந்து இவரை கைது செய்து உள்ளார்கள். இவரது உடைமையில் இருந்து இராணுவ சீருடை ஒன்றும் வெளிநாடு செல்கின்றனைக்கு விண்ணப்பிக்கின்றமைக்கான ஆவணங்களும் பொலிஸாரால் கைப்பற்றப்பட்டு உள்ளன.

இவர் பல மோசடிகளுடன் சம்பந்தப்பட்டு இருப்பவர் என்று பொலிஸார் நம்புகின்றனர். பல தார திருமணத்தின் மூலம் ஏராளமான பெண்களை ஏமாற்றி வந்திருக்கின்றார் என்று இவர் மீது பொலிஸாரால் குற்றம் சாட்டப்பட்டு சட்ட நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றது.

 இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.