Ad

Photobucket
 
புதன், 7 நவம்பர், 2012

அச்சம் வேண்டாம்! 2012-ல் உலகம் அழியாது: சிருங்கேரி பீடாதிபதி ஆறுதல்

2012ம் ஆண்டு உலகம் அழிந்துவிடும் என்று மக்கள் யாரும் அச்சப்படத் தேவையில்லை என்று சிருங்கேரி பீடாதிபதி ஸ்ரீ பாரதி தீர்த்த மகாசுவாமிகள் தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புகழ் பெற்று திகழும் பீடாதிபதிகளுள் ஒருவரான ஸ்ரீபாரதி தீர்த்த மகாசுவாமிகள் உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களுக்கு சென்று தரிசனம் செய்து வருகிறார். இதன்படி ஆந்திர மாநிலம் காளகஸ்தியில் உள்ள வாயுலிங்கேஸ்வரர் கோவிலுக்கு வந்த அவரிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பினர்.

உலகம் அழிந்துவிடுமா என்று அவர் எழுப்பிய கேள்விக்கு பதிலளித்த சுவாமிஜி, இந்துமத சாஸ்திரப்படி 2012-ல் உலகம் ஒருபோதும் அழியாது. இந்த உலகம் அழிய இன்னும் பல ஆயிரம் வருடங்கள் உள்ளன. எனவே பொதுமக்கள் யாரும் பீதி அடைய தேவை இல்லை.

சில மதத்தினர் உலகம் அழியும் என்று வதந்தி பரப்புவதை நிறுத்திக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் இப்படி வதந்தி பரப்புபவர்களை யாரும் நம்ப மாட்டார்கள். நான் உலகம் முழுவதிலும் உள்ள இந்து கோவில்களில் தரிசனம் செய்து வருகிறேன். பெரும்பாலான கோவில்களில் ஏழை, பணக்காரன் வித்தியாசம் பார்க்கப்படுகிறது. இதனை கோவில் நிர்வாகிகளும், ஊழியர்களும் கைவிட வேண்டும் என்றார்.


இப்பதிவு பிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்    
0 comments

facebook comment

இங்கே பகிரவும்

More than a Blog Aggregator ஈகரை வலைதிரட்டி More than a Blog Aggregator  Tamil10.com tamil bookmarking news portal , tamil blogs aggregator valaipookkal.com Tamil Blogs Udanz தமிழ் களஞ்சியம் - தமிழ் வலை திரட்டி.

rssadd

 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.