இன்று , உற்சாகமுடன் பணிபுரிவீர்கள். உங்கள் செயல் திறன் கண்டு புதியவர் நட்பு பாராட்டுவர். தொழில், வியாபார வளர்ச்சியில் புதிய பரிமாணம் ஏற்படும். தாராள பணவரவு கிடைக்கும். உறவினர் வருகையால் வீட்டில் மகிழ்ச்சி வளரும். பணியாளர்களுக்கு தாமதமான சலுகைப்பயன் வந்து சேரும்.
ரிஷபம்:
இன்று, நிதானமாக நடத்த வேண்டிய பணி ஒன்று அவசரகதிக்கு மாறலாம். நல்லோரின் ஆலோசனை நன்மை பெற உதவும். தொழில், வியாபாரத்தில் உற்பத்தி, விற்பனை இலக்கு கூடுதல் கால அவகாசத்தில் நிறைவேறும். பணப்பரிவர்த்தனையில் தகுந்த பாதுகாப்பு நடைமுறை பின்பற்ற வேண்டும். எதிர்பார்த்த சுப செய்தி வர தாமதமாகும்.
மிதுனம்:
இன்று, நன்னடத்தை குறைவான சிலர், உங்களைப் புகழ்ந்து பேசி சொந்த காரியம் சாதிக்க முயற்சி செய்வர். அவர்களிடம் எதார்த்தமாக பேசி வழியனுப்புவது சிரமம் தவிர்க்க உதவும். தொழில், வியாபாரம் சுமாராக இருக்கும். பணச்செலவில் சிக்கனம் நல்லது. போக்குவரத்தில் கவன நடை பின்பற்ற வேண்டும்.
கடகம்:
இன்று, உங்கள் மனம், செயலில் புத்துணர்வு பிறக்கும். நிலுவைப் பணியை நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபார நடைமுறை திருப்திகரமாகும். ஆதாய பணவரவு கிடைக்கும். வீட்டு உபயோகப் பொருள் வாங்குவீர்கள். மாணவர்கள் ஞாபகத்திறன் வளர்க்க உரிய பயிற்சி மேற்கொள்வர்.
சிம்மம்:
இன்று, உங்கள் உறவினர்களிடம் அதிக அன்பு, பாசத்துடன் நடந்து கொள்வீர்கள். உங்கள் மீதான மதிப்பு, மரியாதை உயரும். தொழில், வியாபாரம் செழிக்க தேவையான பணிபுரிவீர்கள். உபரி வருமானம் கிடைக்கும். குடும்பத்தேவைகளை மனமுவந்து, தாராள பணச்செலவில் நிறைவேற்றுவீர்கள். அரசியல்வாதிகளுக்கு, எதிரியினால் உருவான தொல்லை விலகும்.
கன்னி:
இன்று, நீங்கள் சந்திக்கின்ற சமூக நிகழ்வு மனதில் பாதிப்பை தரலாம். பிறரை மதித்து பேசுவது அவசியமாகும். தொழில், வியாபார நடைமுறையில் சிறு அளவிலான குளறுபடி உருவாகும். அதை சரி செய்வதால் பணவரவு சீராகும். தியானம், தெய்வ வழிபாடு மனம் அமைதி பெற உதவும். இயந்திர தொழிற்சாலை பணியாளர்கள், பாதுகாப்பு நடைமுறையில் கூடுதல் கவனம் கொள்வது நல்லது.
துலாம்:
இன்று, நீங்கள் குணம் கெட்ட ஒருவருக்கு பரிந்து பேசுகிற சூழ்நிலை உருவாகும். இருப்பினும், தன்நிலை தாழ்ந்து தர்மத்தின் வழி நடப்பீர்கள். தொழில், வியாபாரத்தில் கூடுதல் பணிச்சுமை ஏற்படும். பணவரவுக்கேற்ப செலவுகளை திட்டமிடுவீர்கள். மாறுபட்ட சுற்றுப்புற சூழ்நிலையால், நித்திரை கெடலாம்.
விருச்சிகம்:
இன்று, எவரும் உங்களை மதித்து பேசுகின்ற அனுகூல சூழ்நிலையை பெறுவீர்கள். நிலுவைப் பணிகளை எளிதாக நிறைவேற்றுவீர்கள். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூல காரணி பலம் பெறும். ஆதாய பணவருமானம் கிடைக்கும். புத்திரர் விரும்பிய பொருள் வாங்கித் தருவீர்கள். குடும்பத்தினருடன் சுற்றுலா சென்று வர பயணத்திட்டம் உருவாகும்.
தனுசு:
இன்று, உங்களின் பிடிவாத குணத்தால் சிலரது அதிருப்திக்கு உட்பட நேரிடும். விட்டுக்கொடுக்கும் மனப்பாங்குடன் செயல்படுவதால், பல நலமும் பெறலாம், தொழில், வியாபார நடைமுறை சுமாரான அளவில் இருக்கும். எதிர்பார்த்த பணவரவு கிடைப்பதில் தாமதம் இருக்கும். குடும்பத்தின் முக்கியமான செலவுக்கு, கொஞ்சம் பணக்கடன் பெறுவீர்கள். வெளியூர் பயணத்திட்டத்தில் மாறுதல் இருக்கும்.
மகரம்:
இன்று,உங்கள் ஞாபக தி சிறப்பாக இருக்கும். வாழ்வில் குறுக்கிடும் சிரமம் வெல்லும் திறன் அறிவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சிபணி இனிதாக நிறைவேறும். உபரி வருமானம் கிடைக்கும். அன்புக்கு உரியவர் உபசரிப்பு, பரிசுப்பொருள் தருவார்.
கும்பம்:
இன்று, சிலர் உங்களுக்கு உதவுவது போல பாசாங்கு செய்வர். இருப்பினும், சுய முயற்சியினால் நன்மை பெறுவீர்கள். தொழில், வியாபார வளர்ச்சி சராசரி அளவில் இருக்கும். பணவரவு சிக்கனமாக செலவு செய்வது நல்லது. காலக்கெடு தவறிய உணவுப்பொருள் வாங்க வேண்டாம்.
மீனம்:
இன்று, வெகு நாள் தாமதமான திட்டம் ஒன்றை நிறைவேற்றுவதில், அதிக கவனம் கொள்வீர்கள். குடும்ப உறுப்பினர்களின் ஆதரவு கிடைக்கும். தொழில், வியாபாரம் செழிக்க அனுகூலகாரணி பலம் பெறும். தாராள பணவரவு வந்து சேரும். மாமன், மைத்துனருக்கு இயன்ற அளவில் உதவிபுரிவீர்கள். மாணவர்கள், பொறுப்புணர்வுடன் படித்து பாராட்டு பெறுவர்.
இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்













கருத்துரையிடுக