Ad

Photobucket
 
சனி, 1 பிப்ரவரி, 2014

பாண்டிருப்பு யூத் விளையாட்டு கழகத்திக் சிரேஷ்ட வீரர்களை கௌரவிக்கும் விழா!


பாண்டிருப்பு யூத் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்களை கௌரவிக்கும் விழா கடந்த ஞாயிற்றுக்கிழமை (26/01/2014) வெகு விமர்சையாக நடைபெற்றது....

பாண்டிருப்பு யூத் விளையாட்டு கழகத்தின் சிரேஷ்ட வீரர்களை கௌரவிக்கும் விழா
ஞாயிற்றுக்கிழமை பாண்டிருப்பு நாவலர் மாகாவித்தியால மண்டபத்தில் நடைபெற்றது.
இதில் பாராளுமன்ற உறுப்பினர் இராஜேஸ்வரன், மாநகர சபை உறுப்பினர் விஜயன் மற்றும் லயன்ஸ் குழு தலைவர் ஸ்ரீரங்கள் ஆகியோர் சிறப்பதிதிகளான கலந்து விழாவை சிறப்பித்தனர்.
 

பாண்டிருப்பு மகாவித்தியாலய வேன்ட் குழுவினர் மூலம் அதிதிகள் வரவேற்கப்பட்டனர். தொடர்ந்து அங்கே பாண்டிருப்பு R.V.S நடனக்குழுவினரின் நடன நிகழ்வும் இடம் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது.










Read more...
0 comments
புதன், 20 நவம்பர், 2013

கல்முனை மாமாங்க பிள்ளையார் கோவிலில் விக்கிரகம் மீட்பு!


அம்பாறையில் கல்முனை மாமாங்க பிள்ளையார் ஆலய வளாகத்தில் இருந்து அம்மன் விக்கிரகம், திரிசூலம், இரண்டு எந்திரம் பொறிக்கப்பட்ட தகடுகள் ஆகியன கண்டு எடுக்கப்பட்டு உள்ளன.

பின்னர் தெய்வ வாக்கு கேட்கப்பட்டு, ஆலய வளாகத்தில் முத்துமாரி அம்மன் ஆலயம் அமைக்க ஆலய நிர்வாகம் முடிவு எடுக்கப்பட்டு உள்ளது.

இக்கோவில் சுனாமி அனர்த்தத்தில் சேதம் அடைந்தது குறிப்பிடத்தக்கது.

 
 




Read more...
0 comments
வெள்ளி, 20 செப்டம்பர், 2013

ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய தீப்பாய்தல் நிகழ்வு நேரடியாக பார்வையிட.......

ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வரலாற்றிலே முதல் முறையாக நேரடி ஒளிபரப்பு....

நேரடியாக பார்வையிட கீழே உள்ள இணைப்பை சொடுகவும்

Read more...
0 comments
புதன், 18 செப்டம்பர், 2013

ஸ்ரீ திரௌபதை அம்மன் ஆலய வனவாசம் 2013


பாண்டிருப்பு திரௌபதை அம்மன் ஆலயத்தின் வனவாச நிகழ்வு இன்று இனிதே நடைபெற்றது. இவ் நிகழ்வில் ஏராளமான பக்த அடியாகர்கள் இணைந்து அம்மனின் அருட்கடாட்சத்தை பெற்றனர்.

 3 மணியளவில் ஆரம்பமாகிய வனவாசம்  மாலை 7 மணியளிவில் ஆலயத்தை வந்தடைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.




Read more...
0 comments
வெள்ளி, 6 செப்டம்பர், 2013

ஆண்கள் பெண்கள் பின்னால் சுற்றுவது எதனால்!!


ஆண்களுக்குத்தான் அதிகமாக ஆலோசனைகள் வழங்குகிறேன் ஆனால் பெண்களுக்கும் நல்ல ஆலோசனை தரவேண்டும் என்று பல பெண்கள் வேண்டிக்கொண்டனர். சில நன்பிகளோ என்னோடு பேசுவதே இல்லை அவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள். 

இன்று சில (பல) பெண்கள் ( பெண்கள் என்னை திட்டவேண்டாம் எல்லோரும் இல்லை என்று சொல்ல்கிறேன்). ஆண்களை ஏதோ ஒரு வகையில் தன் பின்னால் அலைய வைக்க வேண்டும் என்று விரும்புகிறார்கள். சில அப்பாவி ஆண்கள் நாய் போல் அலைந்து. கடைசியில் எல்லாம் இழந்து, எல்லாம் புரிந்து….. என்னவோ எல்லாம் நடக்குது… 

சில பெண்கள் தங்கள் நண்பிகளிடம் கேட்டுக்கொள்வார்கள் “அடப்பாவி எப்படிடி இப்படி உன்னாலமட்டும் இப்படி ஆண்களை உன் பின்னால அலைய வைக்க முடியும் என்று” அது பெரிய வேலை இல்லை தங்களால் முடியவில்லையே என்று கவலைப்படுபவர்களுக்காகவே இந்த ஆலோசனைகள். 

பெண்கள் ஆண்களை தன் பின்னால் அலைய வைப்பது எப்படி 

01 . ஆண்களைக் காணும்போது கடைக்கண் பார்வை பார்த்துவிட்டு ஒரு புன்னகை செய்தால் போதும். 

02. ஆண்கள் இருக்கும் அல்லது ஆண்கள் அதிகம் இருக்கின்ற இடங்களில் அடிக்கடி நடமாடுங்கள். அங்கே இருக்கின்ற ஆண்களைத்தான் நீங்கள் பார்க்க வருவதுபோல் பாவனை செயுங்கள். 

03 . அடிக்கடி வாகனங்களில் பயணம் செய்பவர் நீங்களாக இருந்தால் வாகனத்தில் வருகின்ற ஆண்களின் முகத்தை ஒரு தடவை பார்த்து சிறிய புன்னகை… அவ்வளவுதான் உங்களை பின்தொடர்வோர் அதிகமாகிவிடுவார்கள். 

04 . நீங்கள் இணையத்தில் அரட்டையடிப்பவரா? அப்படியாயின் ஆண் அரட்டை நண்பர்களுக்கு ஒரு ஹாய் (hi ) சொன்னால்போதும் உங்களை ஒரு தேவதையாக நினைத்துவிடுவார்கள். 

05 . நீங்கள் தமிழ் கலாசார ஆடைகளை தவிர்த்து நவீன நாகரிக அரை, குறை ஆடைகளோடு பவனி வாருங்கள் உங்கள் பின்னால் நாயும் அலையும். 

06 . எப்பவும் உங்கள் கையில் கைத்தொலைபேசி இருக்கட்டும். ஆண்கள் உங்கள் தொலைபேசி இலக்கத்தை கேட்கும்போது கொடுத்துவிடுங்கள். நீங்கள் அடிக்கடி ஆண்களின் தொலைபேசி இலக்கங்களுக்கு ஒரு missed call (தவறவிட்ட அழைப்பு) பண்ணினால் போதும். ஆண்கள் அழைப்பை எடுத்தால் நீங்கள் பேசவேண்டாம் அல்லது ஹாய் மட்டும் சொல்லிவிட்டு துண்டித்து விடுங்கள். 

07 . ஆண் நண்பர்களோடு பேசும்போது நெருக்கமாக காதலிப்பதுபோல் பேசிக்கொள்ளுங்க. எல்லா நண்பர்களோடும் இப்படியே பழகுங்கள் அவர்கள் உங்களை காதலிக்க ஆரம்பித்தால் நீங்கள் காதலிக்கவில்லை என்றாலும் நீங்கள் காதலிக்கவில்லை என்ற விடயத்தை தெரியப்படுத்த வேண்டாம். வழமையாக நெருக்கமாக பழகுவது போன்றே பழகுங்கள். 

08. உங்களிடம் பலர் காதலை வெளிப்படுத்தி உங்கள் சம்மதம் கேட்டிருக்கலாம், கேட்கலாம் அப்போது முடியாது என்று சொல்லவேண்டாம். பின்னர் சொல்கிறேன் என்று கேட்பவர்கள் எல்லோரிடமும் சொல்லிவிடுங்கள். 

09. உங்களோடு சில பெண் நண்பிகளை வைத்துக் கொள்ளுங்கள். அவர்கள் உங்கள் கதை கேட்டுத்தான் செயற்படுவது போன்று காட்டிக்கொள்ளுங்கள். இந்த நண்பிகளையும் உங்கள் ஆண் நண்பர்களுக்கு அறிமுகம் செய்யுங்கள். ஆனால் அந்த நண்பிகளை உங்கள் ஆண் நண்பர்களோடு தனிப்பட்ட தொடர்பு வைத்துக்கொள்ள விடவேண்டாம். 

10 . இதுதான் முக்கியமானது…. எங்களைப் போன்றவர்களிடம் இது மாத்திரமல்ல எதனை செய்தாலும் நாங்கள் பெண்கள் பின்னால் அலையமாட்டோம். ஆனால் பெண்களைத்தான் எங்கள் பின்னால் அலைய வைப்போம். எங்களைப் போன்றவர்களிடம் உங்கள் வேலையே காட்டி நேரத்தை வீணடித்து எங்கள் பின்னால் நீங்கள் அலைவதைத் தவிர்த்துக்கொள்ளுங்கள்.



இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்  
Read more...
0 comments

நிவாரணம் பெற பிணமாக நடித்தவர் தாகம் எடுத்ததால் சிக்கினார்


சீனாவில் அரசின் நிவாரண உதவி பெறுவதற்காக பிணம் போல் நடித்தவர், வெப்பம் தாங்காமல் எழுந்து ஓடியதால் அதிகாரிகளிடம் மாட்டிக் கொண்டார். 

சீனாவில் இந்த வருடம் மிகவும் கொடுமையான கோடைக்காலம் நிலவுகிறது. வெப்பம் மற்றும் அனல் காற்றின் தாக்கத்தில் பலர் பரிதாபமாக பலியாகி வருகின்றனர். 

அப்படி பலியானவர்களது குடும்பத்திற்கு நிவாரணமாக இழப்பீடு வழங்கி வருகிறது சீன அரசு. அவ்வாறு வழங்கப்படும் நிவாரண உதவியைப் பெறுவதற்காக, ஹூபே நகரைச் சேர்ந்த நபர் ஒருவர் அனல் காற்றில் சிக்கி பலியானவர் போல் நடித்தார். 

அதிகாரிகள் வந்து அவரது உடலைப் பரிசோதித்தனர். திடீரென வெப்பத்தின் தாக்கம் அதிகமாகியதால், பிணமாகப் படுத்திருந்த நபருக்கு தாகம் அதிகரித்தது. 

தண்ணீர் குடிக்காவிட்டால் உயிரே போய் விடும் நிலையில் இருந்த அவர், உயிரைக் காத்துக் கொள்ள உடனடியாக அருகில் இருந்த தண்ணீர் போத்தலை எடுத்து நீர் அருந்தினார். 

இறந்து கிடந்த பிணமொன்று திடீரென எழுந்து தண்ணீர் அருந்துவதைக் கண்ட அரசு அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்தனர். தனது சாயம் வெளுத்துப் போனதால் தப்பி ஓட முயன்ற அந்நபரை பொலிசார் விரட்டிச் சென்று கைது செய்தனர். 

மேலும், அவருக்கு உடந்தையாக இருந்த இருவரும் கைது செய்யப்பட்டுள்ளனர்.



இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்  
Read more...
0 comments

சிங்கத்திற்குப் பதில் நாயை வைத்து ஏமாற்று வித்தை



சீனாவில் உள்ள ஒரு வனவிலங்கு காப்பகத்தில் சிங்கத்திற்கு பதிலாக நாயை வைத்து மக்களை ஏமாற்றியதாக புகார் அளிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

சீனாவின் ஹெனான் மாகாணத்தில் ‘லியோகே’ என்ற இடத்தில் வனவிலங்கு காப்பகம் உள்ளது. இங்கு பலவிதமான மிருகங்கள் கூண்டில் அடைத்து வைக்கப்பட்டு பார்வையாளர்கள் பார்க்க அனுமதி வழங்கப்படுகிறது.

இந்த நிலையில் இந்த காப்பகத்திற்கு வருகை புரிந்த லியூ என்ற பெண் ஆப்பிரிக்க சிங்கம் என்று பெயர் எழுதப்பட்டிருந்த கூண்டில் அடர்ந்த முடியுடன் இருக்கும் திபெடியன் மாஸ்டிப் என்னும் ஒரு ரக நாய் வைக்கபட்டிருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இது குறித்து புகார் அளித்த அவர், இதேபோல், மேலும் 3 விலங்குகளுக்கு வேறு பெயர் கூறி மக்கள் ஏமாற்றப்பட்டுள்ளதாகவும் கூறினார்.

இதனால் காப்பகத்திற்கு வந்த பார்வையாளர்கள் மிகவும் ஏமாற்றம் அடைந்தனர்.பொதுமக்களை இந்த நிர்வாகத்தினர் ஏமாற்றுவதாகவும் அவர்கள் குற்றம் சாட்டினர்.

இதற்கிடையே, ஏற்கனவே இங்கு இருந்த ஆப்பிரிக்க சிங்கம் இனபெருக்கத்துக்கு வேறு இடத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக மிருக காட்சி சாலை தலைமை நிர்வாகி கூறினார்.

அதேபோல் பல்வேறு காரணங்களுக்காக விலங்குகளின் கூண்டுகள் மாற்றியமைக்கபட்டுள்ளதாகவும், இது பார்வையாளர்களை ஏமாற்றும் நோக்கத்தில் செய்யப்பட்டதல்ல எனவும் தெரிவிக்கபட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.



இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்  
Read more...
0 comments
வியாழன், 4 ஏப்ரல், 2013

கிராபிக்ஸ் , எடிட்டிங் இல்லா முழுநீள திகில் அனுபவம் !! (வீடியோ)

அதுபாட்டுக்கு அமைதியாக இருக்கும் மாட்டிடம் பின்புறத்தைக் காட்டி குத்து குத்து என்றால் .. அது குத்தத்தானே செய்யும் !!

 இவர்களும் அப்படியொரு வில்லங்கமான வீர விளையாட்டை விளையாடுகிறார்கள் , சிலருக்கு பயமாக இருந்தாலும் பார்ப்பவர்கள் பலருக்கு சிரிப்பை அடக்கமுடியாமலிருக்கும் !!





இப்பதிவுபிடித்திருந்தால் உங்கள் நண்பர்களுடன் பேஸ்புக்கில் பகிர்ந்து கொள்ளுங்கள்   

Read more...
0 comments
Photobucket
 
பாண்டிருப்பு நீயூஸ் © 2012 PrAsHa & Create.